குர்ஆன் 46:8 — மணற்குன்றுகள்
“இதனை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார்,” என்று அவர்கள் கூறும்போது, “இதனை நான் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுள்-இடமிருந்து என்னைக் காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.
[46:7] நம்முடைய வெளிப்பாடுகள் முற்றிலும் தெளி வாக, அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்ப மறுப்பவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமேயாகும்!” என்று கூறினார்கள்.
[46:9] “மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவர் அல்ல. எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். நான் ஆழ்ந்ததொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.