Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:13 — முஹம்ம

உம்முடைய நகரத்தை விட்டு உம்மை வெளி யேற்றிய சமூகத்தை விட மிகவும் வலிமையான சமூகம் பல இருந்தன; நாம் அவர்களை அழித்த போது, எவர் ஒருவரும் அவர்களுக்கு உதவ இயலவில்லை.

[47:12] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிக் கின்றார். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்ந்து கொண்டும், மிருகங்கள் தின்பதைப் போலத் தின்று கொண்டும் இருக்கின்றனர், பின்னர் நரக நெருப்பைச் சென்றடைவார்கள்.

[47:14] தங்களுடைய இரட்சகரால் அறிவூட்டப் பெற்றவர்களும், எவர்களுடைய தீய காரியங்கள் அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப் பட்டு, மேலும் தங்களுடைய சுய அபிப்பிராயங் களைப் பின்பற்றுகின்றவர்களும் சமமான வர்கள் ஆவார்களா?