Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:14 — முஹம்ம

தங்களுடைய இரட்சகரால் அறிவூட்டப் பெற்றவர்களும், எவர்களுடைய தீய காரியங்கள் அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப் பட்டு, மேலும் தங்களுடைய சுய அபிப்பிராயங் களைப் பின்பற்றுகின்றவர்களும் சமமான வர்கள் ஆவார்களா?

[47:13] உம்முடைய நகரத்தை விட்டு உம்மை வெளி யேற்றிய சமூகத்தை விட மிகவும் வலிமையான சமூகம் பல இருந்தன; நாம் அவர்களை அழித்த போது, எவர் ஒருவரும் அவர்களுக்கு உதவ இயலவில்லை.

[47:15] நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சுவனத்தின் உவமானம் இதுவாகும்: அதில் மாசற்ற தண்ணீரைக் கொண்ட நதிகளும், மேலும் புத்தம் புதிய பாலாறுகளும், மேலும் மது ஆறுகளும் - அருந்துபவர்களுக்கு மதுர மானது - மேலும் வடிகட்டப்பட்ட தேனாறுகளும் உள்ளன. அதிலே அனைத்துக் கனிவர்க்கங் களும், மேலும் அவர்களுடைய இரட்சகரின் மன்னிப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்கள் மேலானவர்களா) அல்லது நரக நெருப்பில் என்றென்றும் தங்கியிருந்து, மேலும் அவர்களுடைய குடல்களைக் கிழித்து விடுகின்ற நரக தண்ணீரை அருந்துகின்றவர்களா?