குர்ஆன் 47:25 — முஹம்ம
நிச்சயமாக, எவர்கள் வழிகாட்டல் தங்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும், பின்னால் சறுக்கி விடுகின்றார்களோ, அவர்களைச் சாத்தான் வசீகரித்து விட்டான், மேலும் தவறான வழியில் இட்டுச் சென்று விட்டான்.
[47:24] அவர்கள் ஏன் குர்ஆனைக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்காதிருக்கின்றனர்? அவர் களுடைய மனங்களின் மீது பூட்டுக்கள் அவர் களுக்கு இருக்கின்றனவா?
[47:26] இது ஏனெனில் கடவுள் இறக்கி அனுப்பியவற்றை வெறுத்தவர்களிடம் அவர்கள், “குறிப்பிட்ட சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். கடவுள் அவர்களுடைய இரகசியச் சதியாலோசனைகளை முற்றிலும் அறிவார்.