குர்ஆன் 47:26 — முஹம்ம
இது ஏனெனில் கடவுள் இறக்கி அனுப்பியவற்றை வெறுத்தவர்களிடம் அவர்கள், “குறிப்பிட்ட சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். கடவுள் அவர்களுடைய இரகசியச் சதியாலோசனைகளை முற்றிலும் அறிவார்.
[47:25] நிச்சயமாக, எவர்கள் வழிகாட்டல் தங்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும், பின்னால் சறுக்கி விடுகின்றார்களோ, அவர்களைச் சாத்தான் வசீகரித்து விட்டான், மேலும் தவறான வழியில் இட்டுச் சென்று விட்டான்.
[47:27] வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் பொழுது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுடைய முகங்களிலும் மேலும் அவர் களுடைய பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்.