குர்ஆன் 47:33 — முஹம்ம
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படியவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படி யவும் வேண்டும். இல்லையேல், உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வீணானவையாகி விடும்.
[47:32] நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, மேலும் வழிகாட்டல் அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும் தூதரை எதிர்ப்பவர்கள், ஒருபோதும் கடவுள்-க்குச் சிறிதளவும் தீங்கிழைக்க முடியாது. மாறாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:34] எவர்கள் நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, பின்னர் நம்ப மறுப்பவர்களாகவே இறந்து விடுகின்றனரோ, அவர்களைக் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.