குர்ஆன் 47:32 — முஹம்ம
நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, மேலும் வழிகாட்டல் அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும் தூதரை எதிர்ப்பவர்கள், ஒருபோதும் கடவுள்-க்குச் சிறிதளவும் தீங்கிழைக்க முடியாது. மாறாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:31] உங்களில் பாடுபடுபவர்கள், மேலும் உறுதியுடன் விடாமுயற்சி செய்பவர்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுவதற்காக, நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம். உங்களுடைய உண்மையான தன்மைகளை நாம் வெளிப்படுத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.
[47:33] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படியவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படி யவும் வேண்டும். இல்லையேல், உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வீணானவையாகி விடும்.