குர்ஆன் 47:31 — முஹம்ம
உங்களில் பாடுபடுபவர்கள், மேலும் உறுதியுடன் விடாமுயற்சி செய்பவர்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுவதற்காக, நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம். உங்களுடைய உண்மையான தன்மைகளை நாம் வெளிப்படுத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.
[47:30] நாம் நாடினால், அவர்களைப் பார்த்தவுடன் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளும் வண்ணம், அவர்களை உமக்கு வெளிப் படுத்திக்காட்டியிருக்க இயலும். எனினும், அவர்கள் பேசுகின்ற விதத்தின் மூலம் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளலாம். கடவுள் உங்களுடைய காரியங்கள் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[47:32] நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, மேலும் வழிகாட்டல் அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும் தூதரை எதிர்ப்பவர்கள், ஒருபோதும் கடவுள்-க்குச் சிறிதளவும் தீங்கிழைக்க முடியாது. மாறாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.