குர்ஆன் 47:30 — முஹம்ம
நாம் நாடினால், அவர்களைப் பார்த்தவுடன் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளும் வண்ணம், அவர்களை உமக்கு வெளிப் படுத்திக்காட்டியிருக்க இயலும். எனினும், அவர்கள் பேசுகின்ற விதத்தின் மூலம் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளலாம். கடவுள் உங்களுடைய காரியங்கள் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[47:29] தங்களுடைய இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருப்பவர்கள் கடவுள் அவர்களுடைய தீய எண்ணங்களை வெளிக்கொண்டு வர மாட்டார் என எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
[47:31] உங்களில் பாடுபடுபவர்கள், மேலும் உறுதியுடன் விடாமுயற்சி செய்பவர்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுவதற்காக, நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம். உங்களுடைய உண்மையான தன்மைகளை நாம் வெளிப்படுத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.