குர்ஆன் 47:36 — முஹம்ம
இந்த உலக வாழ்வு விளையாட்டு மற்றும் வீணான பெருமை தவிர அதிகம் எதுவுமில்லை. ஆனால் நீங்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால், உங்களிடம் எந்தப் பணமும் கேட்காமல், அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
[47:35] ஆகையால், நீங்கள் தடுமாற்றமடைந்து, சமாதானத்தைத் தேடிச் சரணடையாதிருக்க வேண்டும், ஏனெனில் வெற்றிக்கு நீங்கள் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளீர்கள், மேலும் கடவுள் உங்களுடன் இருக்கின்றார். அவர் ஒருபோதும் உங்களுடைய உழைப்பை வீணாக்கி விட மாட்டார்.
[47:37] உங்களுக்கு ஒரு கஷ்டத்தை உண்டாக்கும் அளவிற்கு, அவர் உங்களிடம் பணம் கேட்டிருந் தால், நீங்கள் கஞ்சர்களாகி இருக்கக் கூடும், மேலும் மறைக்கப்பட்டிருக்கின்ற உங்களுடைய தீயவை வெளிப்பட்டிருக்கக் கூடும்.