Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:11 — வெற்றி

பின்தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்கள், “எங்களுடைய பணம் மற்றும் குடும்பங்களில் மூழ்கியவர்களாக நாங்கள் இருந்து விட்டோம், எனவே எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்பீராக!” என்று கூறுவார் கள். அவர்களுடைய இதயங்களில் இல்லாத தைத் தங்கள் நாவுகளால் அவர்கள் கூறுகின் றனர். “கடவுள் உங்களுக்கு ஏதேனும் துன்பத் தை நாடியிருந்தால், அவரிடமிருந்து உங்களைக்காக்க எவரால் இயலும், அல்லது அவர் உங்களுக்கு ஏதேனும் அருட்கொடையை நாடியிருந்தால்?” என்று கூறுவீராக. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[48:10] நிச்சயமாக, உம்மிடம் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளிப்பவர்கள், கடவுள்-இடமே விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளிக் கின்றனர். கடவுள் அவர்களுடைய வாக்குறுதி யை அங்கீகரிக்கின்றார்; அவர்களுடைய கரங்களுக்கு மேலே அவர் தன் கரத்தை வைக்கின்றார். இத்தகையதொரு வாக்குறுதி யை மீறுபவர்கள், தங்களுக்கே கேடாகத்தான் அம்மீறுதலைப் புரிகின்றனர். கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதியை நிறை வேற்றுபவர்களைப் பொறுத்த வரை, மகத்தான தொரு பிரதிபலனை அவர்களுக்கு அவர் வழங்குவார்.

[48:12] தூதரும் மற்றும் நம்பிக்கையாளர்களும் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் ஒருபோதும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள் என்று நீங்கள் இரகசியமாக நம்பிக்கை கொண்டீர்கள், மேலும் இது உங்களுடைய இதயங்களில் உறுதியாக நிலைப்பெற்றிருந்தது. நீங்கள் கெட்ட எண்ணங்களைத் தாங்கியிருந்தீர்கள், மேலும் தீய மக்களாக மாறிவிட்டீர்கள்.