குர்ஆன் 48:12 — வெற்றி
தூதரும் மற்றும் நம்பிக்கையாளர்களும் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் ஒருபோதும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள் என்று நீங்கள் இரகசியமாக நம்பிக்கை கொண்டீர்கள், மேலும் இது உங்களுடைய இதயங்களில் உறுதியாக நிலைப்பெற்றிருந்தது. நீங்கள் கெட்ட எண்ணங்களைத் தாங்கியிருந்தீர்கள், மேலும் தீய மக்களாக மாறிவிட்டீர்கள்.
[48:11] பின்தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்கள், “எங்களுடைய பணம் மற்றும் குடும்பங்களில் மூழ்கியவர்களாக நாங்கள் இருந்து விட்டோம், எனவே எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்பீராக!” என்று கூறுவார் கள். அவர்களுடைய இதயங்களில் இல்லாத தைத் தங்கள் நாவுகளால் அவர்கள் கூறுகின் றனர். “கடவுள் உங்களுக்கு ஏதேனும் துன்பத் தை நாடியிருந்தால், அவரிடமிருந்து உங்களைக்காக்க எவரால் இயலும், அல்லது அவர் உங்களுக்கு ஏதேனும் அருட்கொடையை நாடியிருந்தால்?” என்று கூறுவீராக. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[48:13] எவர் ஒருவர் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ, நம்ப மறுப்பவர்களுக்கொரு நரக நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம்.