Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:17 — வெற்றி

குருடர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார், முடவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், மேலும் நோயாளி குற்றம் பிடிக்கப்பட மாட்டார். எவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிகின்றனரோ, அவர்களை ஓடிக்கொண் டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் நுழைய அவர் அனும திப்பார். திரும்பிச் சென்று விடுபவர்களைப் பொறுத்த வரை, வலி நிறைந்ததொரு தண்ட னையைக் கொண்டு அவர்களை அவர் பழிவாங்குவார்.

[48:16] பின் தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்களிடம், “வலிமை நிறைந்த மக்களை எதிர் கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் அடிபணியாவிட்டால், அவர்களுடன் சண்டை யிடுவதற்காகவும் நீங்கள் அழைக்கப் படுவீர்கள். நீங்கள் கீழ்ப்படிந்தால், தாராளமான தொரு பிரதிபலனைக் கொண்டு கடவுள் உங்களுக்கு வெகுமதியளிப்பார். ஆனால் கடந்த காலத்தில் செய்ததைப்போல், நீங்கள் மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டால், வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு உங்களை அவர் பழிவாங்குவார்” என்று கூறுவீராக.

[48:18] மரத்தின் அடியில் உம்மிடம் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளித்த நம்பிக்கை யாளர்களைக் கொண்டு கடவுள் திருப்தி யடைந்தார். அவர்களுடைய இதயங்களில் இருந்தவற்றை அவர் அறிந்திருந்தார், மேலும் அதன் விளைவாக, மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அவர் அருள்பாலித்தார், மேலும் உடனடியானதொரு வெற்றியைக் கொண்டு அவர்களுக்கு அவர் வெகுமதி யளித்தார்.