குர்ஆன் 48:16 — வெற்றி
பின் தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்களிடம், “வலிமை நிறைந்த மக்களை எதிர் கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் அடிபணியாவிட்டால், அவர்களுடன் சண்டை யிடுவதற்காகவும் நீங்கள் அழைக்கப் படுவீர்கள். நீங்கள் கீழ்ப்படிந்தால், தாராளமான தொரு பிரதிபலனைக் கொண்டு கடவுள் உங்களுக்கு வெகுமதியளிப்பார். ஆனால் கடந்த காலத்தில் செய்ததைப்போல், நீங்கள் மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டால், வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு உங்களை அவர் பழிவாங்குவார்” என்று கூறுவீராக.
[48:15] போரில் சூறையாடப்பட்ட பொருட்களைத் திரட்டுவதற்கு நீங்கள் எதிர்பார்த்திருக்கும் பொழுது, பின்தங்கியவர்களான சரீர உழைப் பில்லாதவர்கள், “இதில் பங்கு பெறுவதற்காக உங்களைப் பின்தொடர எங்களை அனுமதி யுங்கள்!” என்று கூறுவார்கள். இவ்விதமாக அவர்கள் கடவுள்-ன் வார்த்தைகளை மாற்றி விட விரும்புகின்றனர். “நீங்கள் எங்களைப் பின் தொடராதீர்கள். இதுதான் கடவுள்-ன் தீர்மானமாகும்” என்று கூறுவீராக. அவர்கள் அப்போது, “(பின்தங்கி விட்டதால்) நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டிருக்கின்றீர் கள் போலும்” என்று கூறுவார்கள். உண்மையில், அவர்கள் அரிதாகவே எந்த ஒன்றையும் புரிந்து கொள்கின்றார்கள்.
[48:17] குருடர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார், முடவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், மேலும் நோயாளி குற்றம் பிடிக்கப்பட மாட்டார். எவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிகின்றனரோ, அவர்களை ஓடிக்கொண் டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் நுழைய அவர் அனும திப்பார். திரும்பிச் சென்று விடுபவர்களைப் பொறுத்த வரை, வலி நிறைந்ததொரு தண்ட னையைக் கொண்டு அவர்களை அவர் பழிவாங்குவார்.