குர்ஆன் 48:15 — வெற்றி
போரில் சூறையாடப்பட்ட பொருட்களைத் திரட்டுவதற்கு நீங்கள் எதிர்பார்த்திருக்கும் பொழுது, பின்தங்கியவர்களான சரீர உழைப் பில்லாதவர்கள், “இதில் பங்கு பெறுவதற்காக உங்களைப் பின்தொடர எங்களை அனுமதி யுங்கள்!” என்று கூறுவார்கள். இவ்விதமாக அவர்கள் கடவுள்-ன் வார்த்தைகளை மாற்றி விட விரும்புகின்றனர். “நீங்கள் எங்களைப் பின் தொடராதீர்கள். இதுதான் கடவுள்-ன் தீர்மானமாகும்” என்று கூறுவீராக. அவர்கள் அப்போது, “(பின்தங்கி விட்டதால்) நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டிருக்கின்றீர் கள் போலும்” என்று கூறுவார்கள். உண்மையில், அவர்கள் அரிதாகவே எந்த ஒன்றையும் புரிந்து கொள்கின்றார்கள்.
[48:14] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எவரையும் அவர் மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[48:16] பின் தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்களிடம், “வலிமை நிறைந்த மக்களை எதிர் கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் அடிபணியாவிட்டால், அவர்களுடன் சண்டை யிடுவதற்காகவும் நீங்கள் அழைக்கப் படுவீர்கள். நீங்கள் கீழ்ப்படிந்தால், தாராளமான தொரு பிரதிபலனைக் கொண்டு கடவுள் உங்களுக்கு வெகுமதியளிப்பார். ஆனால் கடந்த காலத்தில் செய்ததைப்போல், நீங்கள் மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டால், வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு உங்களை அவர் பழிவாங்குவார்” என்று கூறுவீராக.