Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:20 — வெற்றி

ஏராளமான போர்ப்பொருட்களை நீங்கள் அடைவீர்கள் என்று கடவுள் உங்களுக்கு வாக்களித்துள்ளார். இவ்விதமாக அவர் இந்த வாழ்விலேயே சில பலன்களை உங்களுக்கு முற்படுத்தினார், மேலும் உங்களுக்கெதிராக மக்களின் அத்துமீறுகின்ற கரங்களை அவர் தடுத்து நிறுத்தினார், மேலும் நம்பிக்கை யாளர்களுக்கு இதனை ஓர் அத்தாட்சியாக ஆக்கினார். இவ்விதமாக, அவர் உங்களை நேரானதொரு பாதையில் வழிநடத்துகின்றார்.

[48:19] கூடுதலாக, ஏராளமான போர்ப் பொருட்களை அவர்கள் அடைந்தனர். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[48:21] நீங்கள் தோற்கடிக்கச் சாத்தியமில்லாத கூட்டத்தைப் பொறுத்தவரை, கடவுள் அவர் களைக் கவனித்துக் கொண்டார்; கடவுள் சர்வ சக்தியுடையவர்.