குர்ஆன் 48:23 — வெற்றி
சரித்திரம் முழுவதும் கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றமுடியாதது என்பதை நீர் காண்பீர்.
[48:22] நம்ப மறுப்பவர்கள் எப்பொழுது உங்களிடம் சண்டையிட்டாலும், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடி விடுவார்கள். அவர்களுக்கு எந்த இரட்சகரும் எஜமானரும் இல்லை; அவர் களுக்கு உதவியாளரும் இல்லை.
[48:24] அவர்தான் உங்களுக்கெதிரான அவர் களுடைய அத்துமீறுகின்ற கரங்களைத் தடுத்து நிறுத்தியவர், மேலும் அவர்களுக்கு மேலாக உங்களுக்கு வெற்றியை வழங்கிய பின்னர், மக்காப் பள்ளத்தாக்கில் அவர்களுக் கெதிரான உங்களுடைய அத்துமீறல் கரங் களைத் தடுத்து நிறுத்தினார். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.