குர்ஆன் 48:28 — வெற்றி
அவர்தான் வழிகாட்டலையும் மேலும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு தன்னுடைய தூதரை மற்ற அனைத்து மார்க்கங்களையும் அது வெற்றி கொள்ளச் செய்வதற்காக அனுப்பியவர். ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர்*.
[48:27] கடவுள் தன்னுடைய தூதரின் சத்தியம் நிறைந்த பார்வையினை நிறைவேற்றி விட்டார்: “கடவுள் நாட்டப்படி, பூரணப் பாதுகாப்புடன், நீங்கள் புனித மஸ்ஜிதில் நுழைவீர்கள், மேலும் (புனித யாத்திரையின் சடங்குகளை நீங்கள் நிறைவு செய்தவாறு) அங்கே உங்கள் முடியை வெட்டிக் கொள்வீர்கள் அல்லது குறைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எவ்வித அச்சமும் இருக்காது. நீங்கள் அறியாதவற்றை அவர் அறிந்திருந்ததால், இத்துடன் உடனடியான தொரு வெற்றியையும் அவர் இணைத் துள்ளார்”.
[48:29] முஹம்மது - கடவுள்-ன் தூதர் - மற்றும் அவருடன் இருப்பவர்கள் நம்ப மறுப்பவர்களிடம் கடுமையாகவும் மேலும் கண்டிப்பாகவும், ஆனால் தங்களுக்கிடையில் கனிவுடனும் மேலும் இரக்கத்துடனும் இருக்கின்றனர். அவர்கள் கடவுள்-ன் அருட் கொடைகளையும் மேலும் பொருத்தத்தையும் தேடியவர்களாக, குனிந்தவர்களாகவும் மேலும் சிரம்பணிந்தவர் களாகவும் அவர்களை நீர் காண்கின்றீர். சிரம் பணிதலின் காரணத்தினால், அவர்களுடைய அடையாளங்கள் அவர்களுடைய முகங்களில் உள்ளன. இது தோராவில் உள்ளதைப் போன்ற அதே உதாரணமாகும். சுவிசேஷத்தில் அவர்களுடைய உதாரணமானது உயரமாகவும் மேலும் பலமாகவும் வளர்ந்து விவசாயிகளை மகிழ்வடையச் செய்கின்ற தாவரங்களைப் போன்றதாகும். இவ்விதமாக அவர் நம்ப மறுப்பவர்களுக்குக் கோபமூட்டுகின்றார். அவர்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு மன்னிப்பையும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனையும் கடவுள் வாக்களிக்கின்றார்.