குர்ஆன் 48:27 — வெற்றி
கடவுள் தன்னுடைய தூதரின் சத்தியம் நிறைந்த பார்வையினை நிறைவேற்றி விட்டார்: “கடவுள் நாட்டப்படி, பூரணப் பாதுகாப்புடன், நீங்கள் புனித மஸ்ஜிதில் நுழைவீர்கள், மேலும் (புனித யாத்திரையின் சடங்குகளை நீங்கள் நிறைவு செய்தவாறு) அங்கே உங்கள் முடியை வெட்டிக் கொள்வீர்கள் அல்லது குறைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எவ்வித அச்சமும் இருக்காது. நீங்கள் அறியாதவற்றை அவர் அறிந்திருந்ததால், இத்துடன் உடனடியான தொரு வெற்றியையும் அவர் இணைத் துள்ளார்”.
[48:26] நம்ப மறுப்பவர்கள் பெரும் கோபம் கொண்டு, மேலும் அவர்களுடைய இதயங்கள் அறியாமை நாட்களின் பெருமையால் நிறைந்திருந்த அதே சமயம், கடவுள் தன்னுடைய தூதரையும் மற்றும் நம்பிக்கையாளர்களையும் அமைதி நிறைந்த மனத் திருப்தியைக் கொண்டு அருள் பாலித்தார், மேலும் நன்னெறியின் வார்த்தை யை ஆதரிப்பதின் பால் அவர்களைச் செலுத்தினார். இதற்குத்தான் அவர்கள் நன்கு தகுதி பெற்றிருந்தனர். கடவுள் அனைத்துப் பொருட் களையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.
[48:28] அவர்தான் வழிகாட்டலையும் மேலும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு தன்னுடைய தூதரை மற்ற அனைத்து மார்க்கங்களையும் அது வெற்றி கொள்ளச் செய்வதற்காக அனுப்பியவர். ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர்*.