குர்ஆன் 48:26 — வெற்றி
நம்ப மறுப்பவர்கள் பெரும் கோபம் கொண்டு, மேலும் அவர்களுடைய இதயங்கள் அறியாமை நாட்களின் பெருமையால் நிறைந்திருந்த அதே சமயம், கடவுள் தன்னுடைய தூதரையும் மற்றும் நம்பிக்கையாளர்களையும் அமைதி நிறைந்த மனத் திருப்தியைக் கொண்டு அருள் பாலித்தார், மேலும் நன்னெறியின் வார்த்தை யை ஆதரிப்பதின் பால் அவர்களைச் செலுத்தினார். இதற்குத்தான் அவர்கள் நன்கு தகுதி பெற்றிருந்தனர். கடவுள் அனைத்துப் பொருட் களையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.
[48:25] அவர்கள் தான், நம்ப மறுத்து மேலும் புனித மஸ்ஜிதை விட்டும் உங்களைத் தடுத்தவர்கள், மேலும் உங்களுடைய நேர்ச்சைகள் அவற்றிற் குரிய சேருமிடத்தை அடைவதையும் கூடத் தடை செய்தவர்கள். அங்கே (எதிரிகளின் பாசறைக்குள்) நீங்கள் அறிந்திராதவர்களாகிய நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் இருந்தனர் மேலும் நீங்கள் அறியாத நிலையில், அவர்களைத் தாக்க இருந்தீர்கள். கடவுள் இவ்விதமாக, தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அனுமதிக் கின்றார். அவர்கள் பிடிவாதம் செய்தால், அவர்களுக்கிடையில் உள்ள நம்ப மறுப்பவர் களை வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு அவர் பழிவாங்குவார்.
[48:27] கடவுள் தன்னுடைய தூதரின் சத்தியம் நிறைந்த பார்வையினை நிறைவேற்றி விட்டார்: “கடவுள் நாட்டப்படி, பூரணப் பாதுகாப்புடன், நீங்கள் புனித மஸ்ஜிதில் நுழைவீர்கள், மேலும் (புனித யாத்திரையின் சடங்குகளை நீங்கள் நிறைவு செய்தவாறு) அங்கே உங்கள் முடியை வெட்டிக் கொள்வீர்கள் அல்லது குறைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எவ்வித அச்சமும் இருக்காது. நீங்கள் அறியாதவற்றை அவர் அறிந்திருந்ததால், இத்துடன் உடனடியான தொரு வெற்றியையும் அவர் இணைத் துள்ளார்”.