குர்ஆன் 49:3 — சுவர்கள்
நிச்சயமாக, கடவுள்-உடைய தூதரிடத்தில் தங்களுடைய குரல்களைத் தாழ்த்திக் கொள் பவர்களுடைய இதயங்கள் தான் நன்னெறி யுடையவையாக இருப்பதற்காக கடவுள்-ஆல் தயார் செய்யப்படுகின்றன*. அவர்கள் மன்னிப் பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதி பலனுக்கும் தகுதி பெற்று விட்டனர்.
[49:2] நம்பிக்கை கொண்டோரே, வேதம் வழங்கப்பட்டவரின்* குரலுக்கு மேலாக உங்களுடைய குரல்களை உயர்த்தாதீர்கள், அன்றியும் நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உங்களுடைய காரியங்கள் பயனற்ற தாக ஆகிவிடாதிருக்கும்பொருட்டு, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் கூச்சலிடுவதைப் போன்று அவரிடம் நீங்கள் கூச்சலிட வேண்டாம்.
[49:4] சுவர்களுக்கு வெளியே இருந்து கொண்டு உம்மை அழைப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் அதிகமானோர் புரிந்து கொள்வதில்லை.