Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:9 — சுவர்கள்

நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், நீங்கள் அவர்களை சமாதானப் படுத்த வேண்டும். ஒரு பிரிவு மற்றதற்கு எதிராக அத்துமீறல் செய்தால், அவர்கள் கடவுள்-ன் கட்டளைக்கு அடிபணியும் வரை, அத்துமீறும் பிரிவினருடன் நீங்கள் சண்டையிட வேண்டும். அவர்கள் அடிபணிந்தவுடன், இரு பிரிவினரையும் நீங்கள் நீதத்துடன் சமாதானப் படுத்த வேண்டும். நீங்கள் நீதியைப் பராமரிக்க வேண்டும்; நீதமாக இருப்பவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

[49:8] கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய அருட்கொடைகளும் இத்தகையதேயாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[49:10] நம்பிக்கையாளர்கள் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆவர்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய குடும்பத் திற்குள் நீங்கள் சமாதானம் பேணவும், மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும்.