Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:10 — சுவர்கள்

நம்பிக்கையாளர்கள் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆவர்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய குடும்பத் திற்குள் நீங்கள் சமாதானம் பேணவும், மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும்.

[49:9] நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், நீங்கள் அவர்களை சமாதானப் படுத்த வேண்டும். ஒரு பிரிவு மற்றதற்கு எதிராக அத்துமீறல் செய்தால், அவர்கள் கடவுள்-ன் கட்டளைக்கு அடிபணியும் வரை, அத்துமீறும் பிரிவினருடன் நீங்கள் சண்டையிட வேண்டும். அவர்கள் அடிபணிந்தவுடன், இரு பிரிவினரையும் நீங்கள் நீதத்துடன் சமாதானப் படுத்த வேண்டும். நீங்கள் நீதியைப் பராமரிக்க வேண்டும்; நீதமாக இருப்பவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

[49:11] நம்பிக்கை கொண்டோரே, எந்த சமூகத்தவரும் மற்ற சமூகத்தவரைக் கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றி எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றியும் நீங்கள் ஒருவர் மற்றவரைப் பரிகாசம் செய்யவோ, அல்லது உங்களுடைய பெயர்களில் வேடிக்கை செய்யவோ வேண்டாம். விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர் தீய நடத்தையின் பால் திரும்புவது உண்மையில் கெட்டதாகும். எவரொருவர் இதன் பின்னரும் வருந்தித்திருந்தவில்லையோ, அவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள் ஆவர்.