Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:11 — சுவர்கள்

நம்பிக்கை கொண்டோரே, எந்த சமூகத்தவரும் மற்ற சமூகத்தவரைக் கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றி எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றியும் நீங்கள் ஒருவர் மற்றவரைப் பரிகாசம் செய்யவோ, அல்லது உங்களுடைய பெயர்களில் வேடிக்கை செய்யவோ வேண்டாம். விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர் தீய நடத்தையின் பால் திரும்புவது உண்மையில் கெட்டதாகும். எவரொருவர் இதன் பின்னரும் வருந்தித்திருந்தவில்லையோ, அவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள் ஆவர்.

[49:10] நம்பிக்கையாளர்கள் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆவர்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய குடும்பத் திற்குள் நீங்கள் சமாதானம் பேணவும், மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும்.

[49:12] நம்பிக்கை கொண்டோரே, எந்தச் சந்தேகத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ஒரு சிறிதளவு சந்தேகம் கூடப் பாவகரமானதாகும். நீங்கள் ஒருவர் மற்றவரை வேவு பார்க்க வேண்டாம், அன்றி நீங்கள் ஒருவர் மற்றவரைப் புறங்கூறவும் வேண்டாம்; இது உங்களுடைய இறந்து போன சகோதரனுடைய மாமிசத்தைத் தின்பதைப் போல வெறுப்பிற் குரியதாகும். நீங்கள் நிச்சயமாக இதனை வெறுப்பீர்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.