குர்ஆன் 49:12 — சுவர்கள்
நம்பிக்கை கொண்டோரே, எந்தச் சந்தேகத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ஒரு சிறிதளவு சந்தேகம் கூடப் பாவகரமானதாகும். நீங்கள் ஒருவர் மற்றவரை வேவு பார்க்க வேண்டாம், அன்றி நீங்கள் ஒருவர் மற்றவரைப் புறங்கூறவும் வேண்டாம்; இது உங்களுடைய இறந்து போன சகோதரனுடைய மாமிசத்தைத் தின்பதைப் போல வெறுப்பிற் குரியதாகும். நீங்கள் நிச்சயமாக இதனை வெறுப்பீர்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.
[49:11] நம்பிக்கை கொண்டோரே, எந்த சமூகத்தவரும் மற்ற சமூகத்தவரைக் கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றி எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றியும் நீங்கள் ஒருவர் மற்றவரைப் பரிகாசம் செய்யவோ, அல்லது உங்களுடைய பெயர்களில் வேடிக்கை செய்யவோ வேண்டாம். விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர் தீய நடத்தையின் பால் திரும்புவது உண்மையில் கெட்டதாகும். எவரொருவர் இதன் பின்னரும் வருந்தித்திருந்தவில்லையோ, அவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள் ஆவர்.
[49:13] மக்களே, ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம், மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொள் வதற்காக, உங்களை வெவ்வேறு சமூகங் களாகவும் மற்றும் இனங்களாகவும் ஆக்கினோம். கடவுள்-ன் பார்வையில் உங்களில் மிகவும் சிறந்தவர், மிகவும் நன்னெறியுடையவரே ஆவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.