Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:13 — சுவர்கள்

மக்களே, ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம், மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொள் வதற்காக, உங்களை வெவ்வேறு சமூகங் களாகவும் மற்றும் இனங்களாகவும் ஆக்கினோம். கடவுள்-ன் பார்வையில் உங்களில் மிகவும் சிறந்தவர், மிகவும் நன்னெறியுடையவரே ஆவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.

[49:12] நம்பிக்கை கொண்டோரே, எந்தச் சந்தேகத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ஒரு சிறிதளவு சந்தேகம் கூடப் பாவகரமானதாகும். நீங்கள் ஒருவர் மற்றவரை வேவு பார்க்க வேண்டாம், அன்றி நீங்கள் ஒருவர் மற்றவரைப் புறங்கூறவும் வேண்டாம்; இது உங்களுடைய இறந்து போன சகோதரனுடைய மாமிசத்தைத் தின்பதைப் போல வெறுப்பிற் குரியதாகும். நீங்கள் நிச்சயமாக இதனை வெறுப்பீர்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.

[49:14] அரேபியர்கள் “நாங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்)” என்று கூறினார்கள். “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; நம்பிக்கை உங்கள் இதயங்களில் நிலைபெறும் வரை, நீங்கள், ‘நாங்கள் முஸ்லிம்கள் (அடிபணிந்தவர்கள் ) என்று தான் கூற வேண்டும்‘” என்று கூறுவீராக. நீங்கள் கடவுள்-க்கும் மற்றும் அவருடைய தூதருக்கும் கீழ்படிந்தால், உங்களுடைய காரியங்களில் எதனையும் அவர் வீணாக்கி விட மாட்டார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.