Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:14 — சுவர்கள்

அரேபியர்கள் “நாங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்)” என்று கூறினார்கள். “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; நம்பிக்கை உங்கள் இதயங்களில் நிலைபெறும் வரை, நீங்கள், ‘நாங்கள் முஸ்லிம்கள் (அடிபணிந்தவர்கள் ) என்று தான் கூற வேண்டும்‘” என்று கூறுவீராக. நீங்கள் கடவுள்-க்கும் மற்றும் அவருடைய தூதருக்கும் கீழ்படிந்தால், உங்களுடைய காரியங்களில் எதனையும் அவர் வீணாக்கி விட மாட்டார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[49:13] மக்களே, ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம், மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொள் வதற்காக, உங்களை வெவ்வேறு சமூகங் களாகவும் மற்றும் இனங்களாகவும் ஆக்கினோம். கடவுள்-ன் பார்வையில் உங்களில் மிகவும் சிறந்தவர், மிகவும் நன்னெறியுடையவரே ஆவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.

[49:15] முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) எவர்கள் என்றால் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொண்டு, பின்னர் எத்தகைய சந்தேகமுமற்ற நிலைப்பாட்டை அடைந்து, மேலும் தங்களுடைய பணத்தையும் மேலும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-ன் நிமித்தம் பாடுபடுபவர்களேயாவர். இவர்கள்தான் உண்மையாளர்கள் ஆவர்.