குர்ஆன் 5:1 — விருந்து
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்களது உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். குறிப்பிட்டு இதில் தடுக்கப்பட்டுள்ளவற்றைத் தவிர, கால் நடைகளை உண்ணுவதற்கு உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதயாத்திரை முழுவதிலும் வேட்டை யாடுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டாம். கடவுள் அவர் விரும்பியவற்றைக் கட்டளை யிடுகின்றார்.
[5:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[5:2] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஆல் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளை மீறாதீர்கள், அன்றி புனித மாதங்களுக்கும், பலியிடப் படவேண்டிய பிராணிகளுக்கும், அவற்றை அடையாளம் காட்டும் மாலைகளுக்கும், தங்களுடைய இரட்சகரிடமிருந்து அருட் கொடைகளையும் மேலும் அங்கீகாரத்தையும் தேடிப் புனிதஸ்தலத்தை (கஃபா) நோக்கிச் செல்பவர்களுக்கும் கெடுதல் செய்யாதீர்கள். நீங்கள் புனித யாத்திரையை நிறைவு செய்து விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். * புனித மஸ்ஜிதிற்கு நீங்கள் செல்வதை முன்னொரு சமயம் தடுத்த மக்களின் மீதுள்ள பகைமை யினால் சினம் கொண்டவர்களாகி, வலுச் சண்டையில் ஈடுபடாதீர்கள். நன்னெறி மற்றும் பயபக்தியின் விஷயங்களில் நீங்கள் ஒத் துழைத்துக் கொள்ளுங்கள், பாவகரமான மற்றும் தீய விஷயங்களில் ஒத்துழைக்காதீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.