குர்ஆன் 5:118 — விருந்து
“நீர் அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.நீர் அவர்களை மன்னித்தால், நீர் சர்வவல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்”.
[5:117] “நான் எதைக் கூறவேண்டும் என்று நீர் எனக்கு கட்டளையிட்டீரோ அதை மட்டுமே அவர்களுக்கு நான் கூறினேன், அது: ‘என்னு டைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-ஐ நீங்கள் வழிபட வேண்டும்’ என்பதே. அவர்களோடு நான் வாழ்ந்த காலம் வரை, அவர்களுக்கிடையில் நான் ஒரு சாட்சியாக இருந்தேன். பூமியில் என்னுடைய வாழ்க்கையை நீர் முடிவடையச் செய்தபோது, நீர் அவர்கள் மீது கண்காணிப் பாளர் ஆகிவிட்டீர். அனைத்திற்கும் நீரே சாட்சியாளர்.
[5:119] கடவுள், “சத்தியவான்கள் அவர்களுடைய சத்தியத்தன்மையின் பொருட்டு காப்பாற்றப் படும் நாள் இதுவாகும்” எனப் பிரகடனம் செய்வார். ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்கள் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.