Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:14 — விருந்து

وَمِنَ الَّذينَ قالوا إِنّا نَصٰرىٰ أَخَذنا ميثٰقَهُم فَنَسوا حَظًّا مِمّا ذُكِّروا بِهِ فَأَغرَينا بَينَهُمُ العَداوَةَ وَالبَغضاءَ إِلىٰ يَومِ القِيٰمَةِ ۚ وَسَوفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِما كانوا يَصنَعونَ

“நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறியவர் களிடமிருந்தும், அவர்களுடைய உடன்படிக் கையை நாம் எடுத்தோம். ஆனால் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட சில கட்டளைகளை அவர்கள் அலட்சியம் செய்தனர். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்களுக்கிடையில் விரோதத்தையும், பகைமையும் கொண்டு அவர் களை நாம் தண்டித்தோம். கடவுள் அதன் பின்னர் அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அறிவிப்பார்.

[5:13] அவர்களுடைய உடன்படிக்கை மீறலின் ஒரு விளைவாகவே நாம் அவர்களை தண்டித்தோம், மேலும் அவர்களுடைய இதயங்களை இறுகும்படி செய்தோம். அதன் விளைவாக அவர்கள் வார்த்தைகளை அவற்றின் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கொண்டார்கள், மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் சிலவற்றை அலட்சியம் செய்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர, அவர்களிடமிருந்து துரோகத்தை நீங்கள் தொடர்ந்து காண்பீர்கள். நீங்கள் அவர்களுடைய பிழைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், மேலும் அவர்களை புறக்கணித்து விட வேண்டும். பரந்த உள்ளமுடையவர்களை கடவுள் நேசிக்கின்றார்.

[5:15] வேதத்தையுடைய மக்களே, வேதத்தில் நீங்கள் மறைத்த ஏராளமான விஷயங்களை உங்களு க்கு அறிவிப்பதற்காகவும், மேலும் நீங்கள் செய்த மற்ற ஏராளமான வரம்பு மீறல்களை மன்னிப்பதற்காகவும் உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். உங்களுக்குக் கடவுள்-இடமிருந்து ஓர் ஆழ்ந்த வேதமும், ஒரு வழிகாட்டியும் வந்திருக்கின்றது.