குர்ஆன் 5:15 — விருந்து
வேதத்தையுடைய மக்களே, வேதத்தில் நீங்கள் மறைத்த ஏராளமான விஷயங்களை உங்களு க்கு அறிவிப்பதற்காகவும், மேலும் நீங்கள் செய்த மற்ற ஏராளமான வரம்பு மீறல்களை மன்னிப்பதற்காகவும் உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். உங்களுக்குக் கடவுள்-இடமிருந்து ஓர் ஆழ்ந்த வேதமும், ஒரு வழிகாட்டியும் வந்திருக்கின்றது.
[5:14] “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறியவர் களிடமிருந்தும், அவர்களுடைய உடன்படிக் கையை நாம் எடுத்தோம். ஆனால் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட சில கட்டளைகளை அவர்கள் அலட்சியம் செய்தனர். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்களுக்கிடையில் விரோதத்தையும், பகைமையும் கொண்டு அவர் களை நாம் தண்டித்தோம். கடவுள் அதன் பின்னர் அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அறிவிப்பார்.
[5:16] இதனைக் கொண்டு, அவருடைய அங்கீ காரத்தை தேடுபவர்களைக் கடவுள் வழி நடத்துகின்றார். அவர்களை, அமைதியான பாதைகளை நோக்கி அவர் வழி நடத்துகின்றார், தன்னுடைய அனுமதியின்படி அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் நடத்துகின்றார். மேலும் அவர்களை நேரான பாதையில் வழி நடத்துகின்றார்.