குர்ஆன் 5:16 — விருந்து
இதனைக் கொண்டு, அவருடைய அங்கீ காரத்தை தேடுபவர்களைக் கடவுள் வழி நடத்துகின்றார். அவர்களை, அமைதியான பாதைகளை நோக்கி அவர் வழி நடத்துகின்றார், தன்னுடைய அனுமதியின்படி அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் நடத்துகின்றார். மேலும் அவர்களை நேரான பாதையில் வழி நடத்துகின்றார்.
[5:15] வேதத்தையுடைய மக்களே, வேதத்தில் நீங்கள் மறைத்த ஏராளமான விஷயங்களை உங்களு க்கு அறிவிப்பதற்காகவும், மேலும் நீங்கள் செய்த மற்ற ஏராளமான வரம்பு மீறல்களை மன்னிப்பதற்காகவும் உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். உங்களுக்குக் கடவுள்-இடமிருந்து ஓர் ஆழ்ந்த வேதமும், ஒரு வழிகாட்டியும் வந்திருக்கின்றது.
[5:17] மேரியின் மகன் மெசையாஹ்வை கடவுள் எனக் கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப் பவர்களே.“மேரியின் மகன் மெசையாஹ் மற்றும் அவருடைய தாயார் மற்றும் பூமியில் உள்ள அனைவரையும் அழிப்பதற்கு அவர் நாடிவிட்டால், கடவுள்-ஐ எவரால் எதிர்க்க இயலும்?” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி இன்னும் அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்தின் ஆட்சியதிகாரமும் கடவுள்-க்கே உரியது. தான் நாடுகின்ற எதையும் அவர் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.