Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:17 — விருந்து

மேரியின் மகன் மெசையாஹ்வை கடவுள் எனக் கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப் பவர்களே.“மேரியின் மகன் மெசையாஹ் மற்றும் அவருடைய தாயார் மற்றும் பூமியில் உள்ள அனைவரையும் அழிப்பதற்கு அவர் நாடிவிட்டால், கடவுள்-ஐ எவரால் எதிர்க்க இயலும்?” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி இன்னும் அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்தின் ஆட்சியதிகாரமும் கடவுள்-க்கே உரியது. தான் நாடுகின்ற எதையும் அவர் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[5:16] இதனைக் கொண்டு, அவருடைய அங்கீ காரத்தை தேடுபவர்களைக் கடவுள் வழி நடத்துகின்றார். அவர்களை, அமைதியான பாதைகளை நோக்கி அவர் வழி நடத்துகின்றார், தன்னுடைய அனுமதியின்படி அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் நடத்துகின்றார். மேலும் அவர்களை நேரான பாதையில் வழி நடத்துகின்றார்.

[5:18] யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் “ நாங்கள் கடவுள்-ன் குழந்தைகள், மேலும் அவருடைய அன்பிற்குரியவர்கள்”. என்று கூறினார்கள். “பின்னர் ஏன் உங்களுடைய பாவங்களுக்காக உங்களை அவர் தண்டிக்கின்றார்? அவர் படைத்த மற்ற மனிதர்களைப் போல நீங்களும் சாதாரண மனிதர்களே,” என்று கூறுவீராக. தான் நாடுகின்றவர்களை அவர் மன்னிக்கின்றார் மேலும் தான் நாடுகின்றவர்களை தண்டிக்கின்றார். வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்தின் ஆட்சியதிகாரமும் கடவுள் -க்கே உரியது. மேலும் இறுதி விதி அவரிடமே உள்ளது.