குர்ஆன் 5:20 — விருந்து
وَإِذ قالَ موسىٰ لِقَومِهِ يٰقَومِ اذكُروا نِعمَةَ اللَّهِ عَلَيكُم إِذ جَعَلَ فيكُم أَنبِياءَ وَجَعَلَكُم مُلوكًا وَءاتىٰكُم ما لَم يُؤتِ أَحَدًا مِنَ العٰلَمينَ
மோஸஸ் அவருடைய மக்களிடத்தில், கூறியதை நினைவு கூருங்கள். “என்னுடைய மக்களே, உங்களின் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள் ளுங்கள்; வேதம் வழங்கப்பட்டவர்களை உங்களில் இருந்து அவர் நியமித்தார், உங்களை அரசர்களாக்கினார், மேலும் எந்த ஒரு மக்களுக்கும் ஒருபோதும் வழங்கிடாதவற்றை உங்களுக்கு அவர் வழங்கினார்.
[5:19] வேதத்தையுடைய மக்களே, “எந்தவொரு உபதேசிப்பவரையோ அல்லது எச்சரிப் பவரையோ நாங்கள் பெறவில்லை” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, தூதர்கள் இல்லாததொரு காலகட்டத்திற்கு பிறகு, விஷயங்களை உங்களுக்கு விளக்கி கூறுவதற்கு, நம்முடைய தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். ஒரு உபதேசிப்பவர் மேலும் எச்சரிப்பவர் இப்பொழுது உங்களிடம் வந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.*
[5:21] “என்னுடைய மக்களே, கடவுள் உங்களுக் காக விதித்துள்ள புனித தேசத்திற்குள் நுழையுங்கள், மேலும் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகாதிருக்கும் பொருட்டு, கலகம் செய்யாதீர்கள்.”