குர்ஆன் 5:24 — விருந்து
அவர்கள், “மோஸஸே, அவர்கள் அதனுள் இருக்கும் வரை, ஒரு போதும் அதனுள் நாங்கள் நுழைய மாட்டோம். ஆகையால், செல்லுங்கள்-நீரும் உம்முடைய இரட்சகரும்-மேலும் சண்டையிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருக்கின்றோம்,” என்று கூறினார்கள்.
[5:23] பயபக்தியுடையவர்களான மற்றும் கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட இரு மனிதர்கள், “வாயி லினுள் மட்டும் நுழைந்து விடுங்கள், நீங்கள் அதனுள் நுழைய மட்டும் செய்துவிட்டால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-ன் மீதே நீங்கள் உறுதியாய் நம்பிக்கை கொள்ள வேண்டும்.” என்று கூறினார்கள்.
[5:25] அவர் “என்னுடைய இரட்சகரே, என்னையும் என் சகோதரரையும் மட்டுமே என்னால் கட்டுப் படுத்த இயலும். ஆகையால், தீய மக்களுடைய சகவாசத்தை விட்டுப்பிரிவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்.