Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:26 — விருந்து

அவர், “இப்பொழுதிலிருந்து இது அவர் களுக்கு நாற்பது வருடங்கள் தடுக்கப் பட்டுள்ளது, இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குறிக்கோளின்றி பூமியைச் சுற்றித் திரிவார்கள். இத்தகைய தீய மக்களுக்காக வருத்தப்படாதீர்கள்” என்று கூறினார்.

[5:25] அவர் “என்னுடைய இரட்சகரே, என்னையும் என் சகோதரரையும் மட்டுமே என்னால் கட்டுப் படுத்த இயலும். ஆகையால், தீய மக்களுடைய சகவாசத்தை விட்டுப்பிரிவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்.

[5:27] ஆதாமுடைய இரண்டு மகன்களின் உண்மை யான சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. அவர்கள் ஒரு நேர்த்திக் கடனை செய்தனர், அவர்களில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் மற்றவரி டத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவன், “நான் நிச்சயமாக உன்னைக் கொன்று விடுவேன்”என்று கூறினான். அவர் கூறினார், “கடவுள் நன்னெறியாளர்களிடமிருந்து மட்டுமே ஏற்றுக் கொள்கின்றார்.