குர்ஆன் 5:28 — விருந்து
“நீ என்னை கொல்வதற்காக உன்னுடைய கரத்தை நீட்டினால், நான் உன்னை கொல் வதற்காக என்னுடைய கரத்தை நீட்ட மாட்டேன். ஏனெனில் நான் பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-இடம் பயபக்தியோடு இருக்கின்றேன்.
[5:27] ஆதாமுடைய இரண்டு மகன்களின் உண்மை யான சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. அவர்கள் ஒரு நேர்த்திக் கடனை செய்தனர், அவர்களில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் மற்றவரி டத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவன், “நான் நிச்சயமாக உன்னைக் கொன்று விடுவேன்”என்று கூறினான். அவர் கூறினார், “கடவுள் நன்னெறியாளர்களிடமிருந்து மட்டுமே ஏற்றுக் கொள்கின்றார்.
[5:29] “என்னுடைய பாவங்களையும் மேலும் உன்னுடைய பாவங்களையும் நான் அல்ல, நீயே சுமந்திட வேண்டும் என நான் விரும்புகின்றேன், பின்னர் நீ நரகத்தில் வசிப்பவர்களுடன் சேர்ந்திடுவாய். வரம்பு மீறுபவர்களுக்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்”.