குர்ஆன் 5:30 — விருந்து
அவனுடைய அகந்தை அவனுடைய சகோதரனைக் கொல்வதற்கு அவனைத் தூண்டியது. அவன் அவரை கொன்றான், மேலும் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டான்.
[5:29] “என்னுடைய பாவங்களையும் மேலும் உன்னுடைய பாவங்களையும் நான் அல்ல, நீயே சுமந்திட வேண்டும் என நான் விரும்புகின்றேன், பின்னர் நீ நரகத்தில் வசிப்பவர்களுடன் சேர்ந்திடுவாய். வரம்பு மீறுபவர்களுக்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்”.
[5:31] அவனுடைய சகோதரனின் பிணத்தை எவ்வாறு புதைப்பது என அவனுக்கு கற்றுத்தருவதற் காகக் கடவுள் பின்னர் ஓர் அண்டங்காக் கையை அனுப்பி மண்ணைத் தோண்டச் செய்தார். அவன் “ எனக்கு கேடுதான், இந்த அண்டங்காக்கையின் அளவு கூட புத்தி சாலியாக இருந்து, என்னுடைய சகோதரனின் பிணத்தை புதைப்பதற்கு நான் தவறி விட்டேன்” என்று கூறினான். அவன் குற்ற முணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்தில் மூழ்கியவன் ஆனான்.