குர்ஆன் 5:40 — விருந்து
வானங்கள் மற்றும், பூமியின் ஆட்சியதி காரத்தைத் தன்வசம் வைத்திருப்பவர் கடவுள் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவர் நாடுவோரை அவர் தண்டிக்கின்றார், மேலும் அவர் நாடுவோரை அவர் மன்னிக் கின்றார் கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[5:39] ஒருவர் இந்தக் குற்றத்தைச் செய்ததற்குப் பின்னால் வருந்தித்திருந்தி மேலும் சீர் திருத்திக் கொண்டால், கடவுள் அவரை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[5:41] தூதரே, அவர்களுக்கிடையில் “நாங்கள் நம்புகின்றோம்” என்று தங்கள் வாயால் கூறி, அதே சமயம் அவர்களுடைய இதயங்கள் நம்பிக்கை கொள்ளாமல், நம்ப மறுப்பதின்பால் விரைந்து செல்பவர்களால் நீர் துன்பம் அடையாதீர். யூதர்களுக்கிடையில் சிலர், பொய்களுக்கு செவி சாய்த்தனர். அவர்கள் மக்களில், உங்களை ஒருபோதும் சந்தித் திராதவர்களுக்கும் மற்றும் சூழ்நிலைக்கு மாற்றமாக வார்த்தைகளைச் சிதைத்துவிட்டு அதன் பின் “இது உங்களுக்கு கொடுக்கப் பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், ஆனால் வேறு ஏதாவது உங்களுக்கு கொடுக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்,” என்று கூறியவர்களுக்குச் செவி சாய்த்தனர். கடவுள் எவரை வேறு வழியில் திருப்ப நாடுகின்றாரோ, அவருக்கு, கடவுள்-க்கு எதிராக எவ்வித உதவியும் செய்ய உங்களால் இயலாது. அவர்களுடைய இதயங்களைத் தூய்மை படுத்தக் கடவுள் விரும்பவில்லை. இந்த உலகத்தில் அவர்கள் இழிவிற்குள்ளாவார்கள், மேலும் மறுவுலகில் அவர்கள் ஒரு பயங்கரமான தண்டனையை அனுபவிப்பார்கள்.