குர்ஆன் 5:49 — விருந்து
நீங்கள், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்க வேண்டும். அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள். மேலும் அவர்கள் கடவுள்-ன் சில வெளிப்பாடுகளை விட்டும் உங்களைத் திருப்பி விடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், அவர்களுடைய சில பாவங்களுக்காக அவர்களைக் கடவுள் தண்டிக்க நாடுகின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மையில், பெரும்பாலான மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.
[5:48] அதன்பிறகு நாம் உமக்கு, சத்தியம் நிறைந்த தாகவும், முந்தைய வேதங்களை உறுதிபடுத்து வதாகவும், மேலும் அந்த வேதங்களை ரத்து செய்து விட்டு அவற்றிற்குப் பதிலாகவும், இந்த வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தினோம். கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க நீங்கள் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டும். மேலும் உங்களிடம் வந்திருக்கக் கூடிய சத்தியத்திற்கு அவர்கள் முரண்பட்டால் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றா தீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நாம் சட்டங்களையும் மாறுபட்ட சடங்குகளையும், கட்டளையிட்டுள்ளோம். கடவுள் நாடி இருந் தால், அவரால் உங்களை ஒரே கூட்டத்தினராக ஆக்கியிருக்க இயலும். ஆனால், அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும்கொடுத்த வெளிப்பாடு களின் மூலமாக, உங்களை இவ்வாறு அவர் சோதனைக்குள்ளாக்குகின்றார். நீங்கள் நன்னெறியில் போட்டியிடுங்கள். உங்க ளுடைய-உங்கள் அனைவருடைய-இறுதி விதி கடவுள்-இடமே உள்ளது, பின்னர் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த அனைத்தையும் அவர் உங்களுக்கு அறிவிப்பார்.
[5:50] அவர்கள் அறியாமைக் காலத்தின் சட்டங் களை ஆதரிக்க நாடுகின்றார்களா? உறுதியை அடைந்து விட்டவர்களுக்கு கடவுள்-உடைய சட்டத்தைவிட யாருடைய சட்டம் சிறந்தது?