குர்ஆன் 5:50 — விருந்து
அவர்கள் அறியாமைக் காலத்தின் சட்டங் களை ஆதரிக்க நாடுகின்றார்களா? உறுதியை அடைந்து விட்டவர்களுக்கு கடவுள்-உடைய சட்டத்தைவிட யாருடைய சட்டம் சிறந்தது?
[5:49] நீங்கள், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்க வேண்டும். அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள். மேலும் அவர்கள் கடவுள்-ன் சில வெளிப்பாடுகளை விட்டும் உங்களைத் திருப்பி விடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், அவர்களுடைய சில பாவங்களுக்காக அவர்களைக் கடவுள் தண்டிக்க நாடுகின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மையில், பெரும்பாலான மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.
[5:51] நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட சில யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். உங்களில் எவர்கள் அவர்களை நண்பர்களாக்கிக் கொள் கின்றார்களோ அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களே ஆவர். வரம்பு மீறுபவர்களை கடவுள் வழி நடத்தமாட்டார்.