குர்ஆன் 5:54 — விருந்து
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை விட்டு பழைய நிலைக்கு திரும்பிவிட்டால், அதன் பிறகு கடவுள் அவர் நேசிக்கும் மேலும் அவரை நேசிக்கும் மக்களை உங்களுடைய இடத்தில், உங்களுக்குப் பதிலாக அமர்த்திவிடுவார். அவர்கள் நம்பிக்கையாளர்களிடம் கனிவாக வும், நம்பிக்கையற்றவர்களிடம் கடுமையாக வும் இருப்பார்கள், மேலும் எந்த நிந்தனைக்கும் அஞ்சாது, கடவுள்-க்காகப் பாடுபடுவார்கள். கடவுள்-உடைய அருட்கொடை இத்தகையதே; அதை அவர் தான் நாடுகின்றவர்களுக்கு கொடுக்கின்றார். கடவுள் தாராளமானவர், எல்லாம் அறிந்தவர்.
[5:53] அதன்பிறகு நம்பிக்கையாளர்கள், “ நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என்று உறுதியுடன் கடவுள் மீது சத்தியம் செய்த அதே மக்களா இவர்கள்”? என்று கூறுவார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தும் பயனற்ற தாகிவிட்டது; அவர்கள் தான் நஷ்டவாளிகள்.
[5:55] உங்களுடைய உண்மையான நண்பர்கள் யாரென்றால் கடவுள்-ம் மற்றும் அவருடைய தூதரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மற்றும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்து வரக்கூடிய, நம்பிக்கையாளர்களும்தான், மேலும் அவர்கள் குனிந்து வழிபடுகின்றனர்.