குர்ஆன் 5:58 — விருந்து
நீங்கள் தொடர்புத் தொழுகைகளுக்காக (ஸலாத்) அழைத்தால், அதை அவர்கள் பரிகாசமும், கேலியும் செய்கின்றார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
[5:57] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய மார்க்கத்தைப் பரிகாசமும், கேலியும் செய்கின்ற முந்தைய வேதத்தைப் பெற்றவர்களுடனும், நம்பிக்கையற்றவர்களுடனும் நட்புக் கொள்ளா தீர்கள். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
[5:59] “வேதத்தையுடைய மக்களே, நாங்கள் கடவுள் -ஐயும், எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், எங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தப் பட்டதையும் நம்புகின்ற காரணத்தாலும், மேலும் உங்களில் பெரும்பாலோர் நன்னெறியாளர் களாக இல்லாத காரணத்தினாலும் தான், நீங்கள் எங்களை வெறுக்கின்றீர்கள் அல்லவா?” என்று கூறுவீராக.