குர்ஆன் 5:7 — விருந்து
உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட் கொடையையும், மேலும் உங்களுடன் உடன் படிக்கை செய்து கொண்ட அவருடைய உடன் படிக்கையையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் “ நாங்கள் கேட்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்படிகின்றோம்” என்று கூறினீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள்; கடவுள் ஆழ்மனதின் எண்ணங்களையும் முழுமையாக அறிவார்.
[5:6] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள்: (1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள், (2) உங்கள் கைகளை முழங்கை கள் வரை கழுவிக்கொள்ளுங்கள், (3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும் (4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள். புணர்ச்சியின் பரவசத் தால் நீங்கள் சுத்தமற்றவர்களாக இருந்தால் நீங்கள் குளிக்க வேண்டும். நீங்கள் நோயுற்றோ அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது செரி மானம் சார்ந்த ஏதேனும் கழிவு ஏற்பட்டிருந்தால் (சிறுநீர், மலம் அல்லது வாயு), அல்லது பெண் களுடன் (பாலியல்) உறவு கொண்டுவிட்டால், மேலும் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனால், சுத்தமான காய்ந்த மணலைத் தொட்டு, பின்னர் உங்களது முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்வதன் மூலம் உலர்ந்த அங்க சுத்தி (தயம்மும்) செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மார்க்கத்தைக் கடினமானதாக்கு வதற்கு கடவுள் விரும்பவில்லை. நீங்கள் நன்றி உடையோராய் இருக்கும் பொருட்டு உங்களை சுத்தப்படுத்துவதற்கும், உங்கள் மீது தன்னுடைய அருட்கொடையை முழுமையாக்குவதற்குமே அவர் விரும்புகின்றார்.
[5:8] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சாட்சி யாளர்களாக பணிபுரியும்போது, நீங்கள் முற்றிலும் நடுநிலையோடிருங்கள். மேலும் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள், மக்களில் சிலர் மீது நீங்கள் கொண்டுள்ள விரோதங்களால் சினம் கொண்டவர்களாகி, அநீதியிழைத்துவிடாதீர்கள். நீங்கள் முற்றிலும் நேர்மையோடிருங்கள், ஏனெ னில் அதுவே மிகவும் நன்னெறியானது. நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.