குர்ஆன் 5:71 — விருந்து
அவர்கள், தாங்கள் சோதிக்கப்பட மாட்டோம் என்று நினைத்தார்கள், ஆகையால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் மாறி விட்டார்கள். பின்னர் கடவுள் அவர்களை மீட்டுக் கொண்டார். ஆனால் அதன் பிறகும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவும் மீண்டும் மாறிவிட்டார்கள். அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்க்கின்றவராக இருக்கின்றார்.
[5:70] இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து நாம் ஒரு உடன்படிக்கை எடுத்துக்கொண்டு, மேலும் அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். தூதர் ஒருவர் அவர்கள் விரும்பாத எதை யேனும் அவர்களிடம் கொண்டு வந்த போதெல் லாம் அவர்களில் சிலரை, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள், மேலும் சிலரைக் கொன்று விட்டார்கள்.
[5:72] மேரியின் மகன் மெசையாஹ்வை, கடவுள் என கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப்பவர்கள் ஆவர். அந்த மெசையாஹ்வே, “இஸ்ரவேலின் சந்ததியரே, என்னுடைய இரட்சகரும்,* உங்களு டைய இரட்சகருமான கடவுள்-ஐ நீங்கள் வழிபட வேண்டும்,” என்றுதான் கூறினார். எவரொருவர் கடவுள்-க்கு இணையை ஏற்படுத்துகின்றாரோ, அவருக்கு கடவுள் சுவனத்தைத் தடை செய்து விட்டார், மேலும் அவருடைய விதி நரகமே. தீயவர்களுக்கு உதவியாளர்கள் இல்லை.