குர்ஆன் 5:70 — விருந்து
இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து நாம் ஒரு உடன்படிக்கை எடுத்துக்கொண்டு, மேலும் அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். தூதர் ஒருவர் அவர்கள் விரும்பாத எதை யேனும் அவர்களிடம் கொண்டு வந்த போதெல் லாம் அவர்களில் சிலரை, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள், மேலும் சிலரைக் கொன்று விட்டார்கள்.
[5:69] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், மதம் மாறியவர்களாயினும், மேலும் கிறிஸ்தவர்களாயினும்; அவர்களில் எவர்கள், (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் (2) இறுதிநாள் மீது நம்பிக்கைகொண்டு மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றார்களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.
[5:71] அவர்கள், தாங்கள் சோதிக்கப்பட மாட்டோம் என்று நினைத்தார்கள், ஆகையால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் மாறி விட்டார்கள். பின்னர் கடவுள் அவர்களை மீட்டுக் கொண்டார். ஆனால் அதன் பிறகும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவும் மீண்டும் மாறிவிட்டார்கள். அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்க்கின்றவராக இருக்கின்றார்.