Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:69 — விருந்து

நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், மதம் மாறியவர்களாயினும், மேலும் கிறிஸ்தவர்களாயினும்; அவர்களில் எவர்கள், (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் (2) இறுதிநாள் மீது நம்பிக்கைகொண்டு மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றார்களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.

[5:68] “வேதத்தையுடைய மக்களே, நீங்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மற்றும் உங்கள் இரட்சகரிடமிருந்து இதில் இறக்கப் பட்டுள்ளதையும் பின்பற்றாத வரை உங்களுக்கு எந்த அடிப்படையும் கிடையாது” என்று கூறுவீராக. நிச்சயமாக, உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகள் அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலும், நம்பிக்கையின்மையிலும் ஆழமாக முழ்கிப் போவதற்கு காரணமாகின்றன. ஆகையால், நம்பமறுக்கும் மக்களுக்காக வருத்தப் படாதீர்கள்.

[5:70] இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து நாம் ஒரு உடன்படிக்கை எடுத்துக்கொண்டு, மேலும் அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். தூதர் ஒருவர் அவர்கள் விரும்பாத எதை யேனும் அவர்களிடம் கொண்டு வந்த போதெல் லாம் அவர்களில் சிலரை, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள், மேலும் சிலரைக் கொன்று விட்டார்கள்.