Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:68 — விருந்து

“வேதத்தையுடைய மக்களே, நீங்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மற்றும் உங்கள் இரட்சகரிடமிருந்து இதில் இறக்கப் பட்டுள்ளதையும் பின்பற்றாத வரை உங்களுக்கு எந்த அடிப்படையும் கிடையாது” என்று கூறுவீராக. நிச்சயமாக, உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகள் அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலும், நம்பிக்கையின்மையிலும் ஆழமாக முழ்கிப் போவதற்கு காரணமாகின்றன. ஆகையால், நம்பமறுக்கும் மக்களுக்காக வருத்தப் படாதீர்கள்.

[5:67] தூதரே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களு க்கு வெளிப்படுத்தப்பட்டதை அறிவித்து விடுங்கள் - அவ்வாறு நீர் செய்யாதவரை, அவருடைய செய்தியை நீர் அறிவித்தவராக மாட்டீர்-மேலும் மக்களிடமிருந்து கடவுள் உங்களை பாதுகாப்பார். கடவுள் நம்பிக்கை யற்ற மக்களை வழிநடத்த மாட்டார்.

[5:69] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், மதம் மாறியவர்களாயினும், மேலும் கிறிஸ்தவர்களாயினும்; அவர்களில் எவர்கள், (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் (2) இறுதிநாள் மீது நம்பிக்கைகொண்டு மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றார்களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.