குர்ஆன் 5:67 — விருந்து
தூதரே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களு க்கு வெளிப்படுத்தப்பட்டதை அறிவித்து விடுங்கள் - அவ்வாறு நீர் செய்யாதவரை, அவருடைய செய்தியை நீர் அறிவித்தவராக மாட்டீர்-மேலும் மக்களிடமிருந்து கடவுள் உங்களை பாதுகாப்பார். கடவுள் நம்பிக்கை யற்ற மக்களை வழிநடத்த மாட்டார்.
[5:66] அவர்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மேலும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்களுக்கு இதில் இறக்கப்பட்டதையும் பின்பற்றி இருப்பார்களேயானால் அவர்களு க்கு மேலிருந்தும், அவர்கள் பாதங்களுக்கு கீழிருந்தும் அவர்கள் அருட்கொடைகளால் பொழியப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் நன்னெறியாளர்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவம் செய்பவர்கள்.
[5:68] “வேதத்தையுடைய மக்களே, நீங்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மற்றும் உங்கள் இரட்சகரிடமிருந்து இதில் இறக்கப் பட்டுள்ளதையும் பின்பற்றாத வரை உங்களுக்கு எந்த அடிப்படையும் கிடையாது” என்று கூறுவீராக. நிச்சயமாக, உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகள் அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலும், நம்பிக்கையின்மையிலும் ஆழமாக முழ்கிப் போவதற்கு காரணமாகின்றன. ஆகையால், நம்பமறுக்கும் மக்களுக்காக வருத்தப் படாதீர்கள்.