குர்ஆன் 5:9 — விருந்து
கடவுள் நம்பிக்கை கொண்டு, நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு பாவமன்னிப்பையும், பெரியதொருவெகுமதியையும் வாக்களிக்கின்றார்.
[5:8] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சாட்சி யாளர்களாக பணிபுரியும்போது, நீங்கள் முற்றிலும் நடுநிலையோடிருங்கள். மேலும் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள், மக்களில் சிலர் மீது நீங்கள் கொண்டுள்ள விரோதங்களால் சினம் கொண்டவர்களாகி, அநீதியிழைத்துவிடாதீர்கள். நீங்கள் முற்றிலும் நேர்மையோடிருங்கள், ஏனெ னில் அதுவே மிகவும் நன்னெறியானது. நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[5:10] நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.